விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் |

தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாகவே அடுத்த சூப்பர்ஸ்டார் யார் என்ற சர்ச்சை இருந்து வருகிறது. 'வாரிசு' பட விழாவில் விஜய்யை சிலர் சூப்பர்ஸ்டார் என சொன்ன பிறகு அந்த சர்ச்சை அதிகமானது. அந்தப் படம் ஓடி முடிந்த பின்னும் இன்னமும் அவ்வப்போது அது புகைந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு '1947 ஆகஸ்ட் 16' பட டிரைலர் வெளியீட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் சிவகார்த்திகேயன். அப்போது அவரிடம் உங்களிடம் ரஜினி சாயல் தெரிகிறதே என பத்திரிகையாளர் ஒருவர் கேட்டதற்கு சிவகார்த்திகேயன், “கிட்டத்தட்ட 1000, 2000 மேடைகளில் ரஜினி சார் மாதிரி மிமிக்ரி பண்ணியிருப்பேன். அதை நான் நன்றாகப் பண்ணுவேன்னும் சொல்வாங்க. அது எப்பவுமே என் மேல இருந்துட்டேயிருக்கும். அது பிளான் பண்ணிலாம் பண்றதில்ல. அது எப்பவுமே என்கிட்ட உண்டு, அது எனக்கு சந்தோஷம்தான்,” என்றார்.
சிவகார்த்திகேயன் அடுத்து நடித்து வெளிவர உள்ள படத்தின் பெயர் 'மாவீரன்'. அப்பெயரில் ரஜினிகாந்த் நடித்து ஏற்கெனவே ஒரு படம் வெளியாகி உள்ளது. அடுத்த சூப்பர்ஸ்டார் யார் என்ற சர்ச்சை இன்னும் முடியாத நிலையில், தன்னிடம் ரஜினி சாயல் இருப்பது குறித்து சிவகார்த்திகேயன் பேசியிருப்பது மறைமுகமாக எதையோ சொல்ல வருவது போலவே உள்ளது.