இரு மொழி படம் இயக்கும் விஜய் மில்டன் | நாளை படப்பிடிப்புகள் நடக்கும் : தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு | பிளாஷ்பேக்: பாடலுக்காக திரைக்கதையை மாற்றிய கே.எஸ்.ரவிகுமார் | பிளாஷ்பேக் : மருங்காபுரி சிவபாக்கியத்தின் நூற்றாண்டு | பிளாஷ்பேக்: 'சிட்டாடெல்' ஆனந்தன் சினிமாவின் 'விஜயபுரி வீரன்' | மாஸ்டர் 2ம் பாகத்தை விரும்பும் லோகேஷ் | ராம் பொத்தினேனி படத்தில் உபேந்திரா | இளையராஜா படத்தை மிஸ் செய்த கார்த்திக் சுப்பராஜ் | பென்ஸ் படம் பூஜையுடன் துவங்கியது | தோனி குறித்து நெகிழ்ந்த மீனாட்சி சவுத்ரி |
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி, பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், தொடர்கள் மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. குறிப்பாக ஹிந்தியில் வெளியாகி வரவேற்பை பெறும் பேண்டசி தொடர்களை மொழிமாற்றம் செய்து வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது புதிதாக அமானுஷ்ய தொடரான 'பிசாசினி' எனும் தொடர் நேற்று முதல் ஒளிபரப்பாக தொடங்கி உள்ளது.
இந்தத்தொடர் ராணி என்ற பெண்ணின் வாழ்க்கையை சுற்றி வருகிறது. அவள் தன்னிடம் அசாதாரண சக்திகள் இருப்பதைக் கண்டுபிடித்து, அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை கற்றுக் கொண்டு செயல்படுகிறாள். அவ்வாறு செய்யும்போது அவள் வாழ்க்கையில் என்னென்ன சம்பவங்கள் நிகழ்கிறது என்பதே இந்த தொடரின் கதையாகும். இந்தத் தொடரில் முக்கிய வேடங்களில் நைரா பானர்ஜி, ஜியா சங்கர் மற்றும் ஹர்ஷ் ராஜ்புத் ஆகியோர் நடித்துள்ளனர். காதல், பழிவாங்குதல் மற்றும் நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான போட்டி என அனைத்தும் இந்த தொடரில் இடம் பெற்றுள்ளன.