சாண்டி படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா | விக்ரம் படத்தை வெளியிடும் விஜய் பட தயாரிப்பாளர்! | தமிழ் படங்களுக்கு நோ சொன்ன இளம் நடிகை | புருவ அழகுக்கு ஞாபக மறதி : அறிமுகப்படுத்திய இயக்குனர் தாக்கு | ராமனாக நடித்தது அதிர்ஷ்டம் - பிரபாஸ் | விஜய் பிறந்த நாளில் வெளியாகும் இரண்டு அப்டேட் | கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஸ்வாரா பாஸ்கர் | மேகா ஆகாஷ் திருமண செய்தி உண்மையல்ல... | ஹீரோயினாக நடிக்கும் அஸ்மிதா | 23ம் தேதி வெளியாகிறது 'கேரளா கிரைம் பைல்ஸ்' |
தமிழ் சினிமாவிலிருந்து சில முக்கிய படங்கள் மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்படுவது வழக்கம்தான். அந்த விதத்தில் சிவா இயக்கத்தில் அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடித்து 2015ல் வெளிவந்து பெரும் வெற்றியைப் பெற்ற படம் 'வேதாளம்'. இப்படத்தைத் தெலுங்கில் மெஹர் ரமேஷ் இயக்க, சிரஞ்சீவி, தமன்னா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்க 'போலா சங்கர்' என்ற பெயரில் ரீமேக் செய்து வருகிறார்கள். இப்படத்தை ஆகஸ்ட் 11ம் தேதி வெளியிட உள்ளதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடித்து 2020ம் ஆண்டு ஓடிடி தளத்தில் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'சூரரைப் போற்று'. அப்படத்தை ஹிந்தியில் சுதா கொங்கரா இயக்க அக்ஷய்குமார், ராதிகா மதன் மற்றும் பலர் நடிக்க ஹிந்தியில் ரீமேக் ஆகி வருகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை செப்டம்பர் 1ம் தேதி வெளியிட உள்ளதாக நேற்று அறிவித்துள்ளார்கள். ஒரே நாளில் இரண்டு முக்கிய படங்களின் வெளியீட்டு அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.