போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

துணிவு படத்திற்கு பின் அஜித்தின் 62வது படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி ஓராண்டு ஆகிவிட்டது. விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த இந்தப்படம் இப்போது மகிழ்திருமேனிக்கு மாறி உள்ளது. இருப்பினும் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் உள்ளனர். இந்த அறிவிப்பை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் நடிகர் அஜித் தனது குடும்பத்தினர் உடன் வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன. சில தினங்களுக்கு முன் கால்பந்து மைதானத்தில் குடும்பத்தினர் உடன் அஜித் இருக்கும் போட்டோக்கள் வெளியாகின. தற்போது கடலின் பின்னணியில் சிறிய கப்பல் ஒன்றில் அஜித், ஷாலினி இருவரும் நெருக்கமாக ரொமான்டிக்காக போஸ் கொடுக்கும் படங்கள் வெளியாகி, வைரலாகின.