விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா | 2024ல் அதிகம் பேர் பார்த்த படமாக 'அமரன்' | வாரணாசி கோவிலுக்கு சென்று வழிபட்ட ஸ்ரீலீலா | சங்கராந்தியில் ஒரு 'ஷங்கரா'ந்தி : கேம் சேஞ்சர் டப்பிங்கில் வியந்த எஸ்.ஜே.சூர்யா | 6 வருடங்களில் 6வது முறையாக பஹத் பாசிலுடன் இணைந்த இயக்குனர் |
பிரபல மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட் கோவை குணா(54), உடல்நலக்குறைவால் கோவையில் காலமானார். சின்னத்திரை நிகழ்ச்சியான கலக்கப்போவது யாரு, அசத்தபோவது யாரு போன்ற நிகழ்ச்சிகளில் பல குரல்களில் பேசி ரசிகர்களை கவர்ந்தவர் குணா. கோவையை சேர்ந்த இவர் கோவை குணா என்றே அழைக்கப்பட்டார்.
சின்னத்திரை மட்டுமல்லாது ஏராளமான மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தினார். குறிப்பாக நடிகர்கள் கவுண்டமணி, ஜனகராஜ் போன்றவர்களின் குரலையும், அவர்களது உடல் மேனரிசத்தையும் அப்படியே வெளிப்படுத்தும் திறமைப்படைத்தவர்.
கோவை மாவட்டம், சரவணம்பட்டி அடுத்த விநாயகபுரம் பகுதியில் குடும்பத்தோடு வசித்து வந்தார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். நீரிழிவு நோய் காரணமாக சிறுநீரகங்கள் செயலிழந்த நிலையில் கடந்த ஓராண்டாக கோவை அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சையின் போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இன்று(மார்ச் 20) உயிரிழந்தார்.
குணாவின் பழைய மிமிக்கிரி காமெடி வீடியோக்களை பகிர்ந்து அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்.