'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் மற்றும் பலர் நடித்துள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த மாதம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தின் முதல் சிங்கிளான 'அக நக' பாடல் இன்று மாலை வெளியாகிறது. அதற்கான புரமோஷனை டுவிட்டரிலிருந்தே ஆரம்பித்துள்ளது படக்குழு. இன்று வெளியாக இருக்கும் பாடல் கார்த்தி, த்ரிஷா இடம் பெறும் பாடல். அதனால், டுவிட்டரில் கார்த்தியும், த்ரிஷாவும் அவரவர் கதாபாத்திரங்களாக கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டு சாட்டிங் செய்து வருகிறார்கள்.
சுவாரசியமானப் பதிவாக இருக்கும் அவை ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகத்திற்கான வசூல் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகத்திற்கு அதிகமான புரமோஷன் செய்வார்களா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடத்தில் உள்ளது.
முதல் பாகம் தமிழகத்தைத் தவிர பிற மாநிலங்களில் பெரிய வசூலைக் குவிக்கவில்லை என்பது உண்மை. அதை மணிரத்னம் எப்படி சரி செய்யப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
வந்தியதேவன் - குந்தவை கலந்துரையாடல் கீழே....
வந்தியதேவன்(கார்த்தி) : இளையபிராட்டி…hi
குந்தவை (த்ரிஷா) : என்ன வாணர்குல இளவரசே?
வந்தியதேவன்(கார்த்தி) : தங்கள் தரிசனம் கிடைக்குமா
குந்தவை (த்ரிஷா) : ம்ம்ம்…யோசித்து செய்தி அனுப்புகிறேன்
வந்தியதேவன்(கார்த்தி) : கடல் கடந்து சென்று உங்கள் ஆணையை நிறைவேற்றிவிட்டு வருபவனுக்கு மோரை மட்டும் கொடுத்து அனுப்பி விடமாட்டீர்களே.. ?
குந்தவை (த்ரிஷா) : வேறென்ன வேண்டும் வந்தியத்தேவருக்கு? கொடுத்த பொருளை திருப்பி கேட்கபோகுறீர்களா ?
வந்தியதேவன்(கார்த்தி) : ஐயய்யோ என் உயிர் என்றுமே உங்களுடையது தேவி. நான் பழையாறை வந்ததும் நாம் vibe ஆக ஒரு பாடல் தயார் செய்ய சொல்லுங்களேன்….