அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. சமீபத்தில் மயோசிட்டிஸ் என்ற அரியவகை தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு தற்போது குணமாகி உள்ளார். இவர் நடித்த 'சாகுந்தலம்' திரைப்படம் ஏப்.,14ல் வெளியாகிறது. இதனையடுத்து விஜய் தேவரகொண்டா உடன் 'குஷி' படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது வீட்டில் உள்ள லிங்க பைரவி முன் அமர்ந்து வழிபடும் புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். அதில் அவர், 'சில சமயங்களில் சூப்பர் ஹியூமன் சக்தி தேவையில்லை என்பதுதான் எனது கருத்து. நம்பிக்கை உங்களை எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லும். நம்பிக்கை உங்களை அமைதியாக வைத்திருக்கும், நம்பிக்கை உங்கள் ஆசிரியராகவும் நண்பராகவும் மாற்றும். மொத்தத்தில் நம்பிக்கையே உங்களை சூப்பர் ஹியூமனாக மாற்றும்' என்று தெரிவித்துள்ளார். சமந்தாவின் இந்த பதிவுக்கு பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.