சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி |
நடிகர் சூர்யா முதல் முறையாக இயக்குனர் சிறுத்தை சிவா உடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 42வது படமாக உருவாகும் இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படம் நிகழ்காலம் மற்றும் பீரியட் படமாகவும் உருவாகிறது.
இந்த படத்தில் சூர்யா, 5 வித்தியாசமான தோற்றங்களில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை 2024 பொங்கல் அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளார்கள். இந்நிலையில் இப்படத்தின் முதல் பார்வை மற்றும் விளம்பர வீடியோ ஷூட்டிங் நேற்று நடைபெற்றுள்ளது. ஏப்ரல் 14ல் இந்த படத்தின் முதல் பார்வை வெளியாகும் என படத்தின் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் அறிவித்துள்ளார்.