கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் |
இயக்குனர் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தமிழரசன். சோனு சூட், சுரேஷ்கோபி, ராதாரவி, யோகி பாபு, சங்கீதா, கஸ்தூரி, ரோபோ சங்கர், சாயாசிங், மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன், சென்ட்ராயன், கும்கி அஸ்வின், முனீஸ்காந்த் என இவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இளையராஜா இசை அமைத்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
கடந்தாண்டே ரிலீசுக்கு தயாரான இப்படம் நிறைய ரிலீஸ் தேதி அறிவித்தும் வெளியாகாமல் தள்ளி சென்றது. தற்போது புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் வரும் மார்ச் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துள்ளனர். இந்த முறையாவது சொன்ன தேதியில் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.