குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
'கண்ணும் கண்ணும் கொள்யைடித்தால்' படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில், சிம்பு நடிக்க உள்ள அவரது 48வது படத்தை கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இப்படம் பற்றிய அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியானது.
சரித்திரப் படமாக உருவாக உள்ளதாக சொல்லப்படும் இப்படத்திற்காக 100 கோடி ரூபாயை பட்ஜெட்டாக ஒதுக்கியுள்ளார்கள் எனத் தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயம் சிம்புவிற்கு மட்டுமே சம்பளமாக 40 கோடி தருகிறார்கள் என்றும் பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள். சிம்பு அவ்வளவு சம்பளத்தைக் கேட்டிருப்பது இதுவே முதல் முறை என்பது கூடுதல் தகவல்.
அதிகபட்சமாக 10 கோடி மட்டுமே வாங்கிய சிம்பு, 'வெந்து தணிந்தது காடு' படத்திற்குப் பின் தனக்கு யார் அதிக சம்பளம் தருகிறார்களோ அவர்களது படத்தில் நடிக்க முடிவெடுத்ததாகச் சொல்கிறார்கள். சிம்புவிற்கு மட்டுமே 40 கோடியைக் கொடுத்துவிட்டு மீதியுள்ள 60 கோடியில் எப்படி சரித்திரப் படத்தைத் தயாரிக்க முடியும் என்றும் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.