போர் வீரனாக நடிக்கும் நிகில் | சொகுசு கார் விவகாரம் : ஹாரிஸ் ஜெயராஜுக்கு விதிக்கப்பட்ட அபராதம் நிறுத்தி வைப்பு | இந்திய சினிமாவின் நாயகன் : மணிரத்னத்தை வாழ்த்திய கமல் | குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளையராஜா | கீர்த்தி சுரேஷிற்கு அழகு, அறிவு இரண்டுமே இருக்கிறது : கமல் | சார்பட்டா பரம்பரை 2 எப்போது துவங்கும்? | கார்த்தி படத்தில் இணைந்த அரவிந்த்சாமி | மீனவர் கதாபாத்திரத்தில் நாக சைதன்யா | எதிர்நீச்சல் தொடரில் முக்கிய ரோலில் என்ட்ரியாகும் திருச்செல்வம் | அன்பிற்காக மட்டுமே பக்கபலமாக நிற்பவர் விஜய் தேவரகொண்டா : சமந்தா நெகிழ்ச்சி |
வெற்றிமாறன் இயக்கத்தில் காமெடி நடிகர் சூரி முதன்முறையாக கதையின் நாயகனாக நடித்துள்ள படம் விடுதலை. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, கவுதம் மேனன் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். உணர்வுபூர்வமான கதையில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. சென்னையில் இந்தப் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது. இதில் சூரி வெற்றிமாறன் உள்ளிட்ட பட குழுவினர் கலந்து கொண்டனர்.
விழாவில் இளையராஜா பேசியதாவது :
வெற்றி மாறனின் ஒவ்வொரு திரைக்கதையும் தனித்துவமானவை. கடலில் தோன்றும் அலையை போன்றது அவரது திரைக்கதை. 1,500 படங்களுக்கு இசை அமைத்தபின்னரும் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன் அதாவது வெற்றிமாறன் திரை உலகிற்கு கிடைத்த ஒரு முக்கியமான இயக்குனர். இதை நான் ஏன் சொல்கிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். திரை உலகிற்கு கிடைத்த நல்லதொரு இயக்குனர் அவர். . அதே போல் நீங்கள் இது வரையில் கேட்காத இசையை இப்படத்தில் கேட்பீர்கள் இவ்வாறு அவர் பேசினார்.