துருவ நட்சத்திரம் படத்திற்கு யாரும் உதவவில்லை: கவுதம் மேனன் வருத்தம் | வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திய 'விடுதலை': சூரி நெகிழ்ச்சி | 'ஜெயம்' வேண்டாம்; ரவி போதும்: அறிக்கை வெளியிட்டு அறிவிப்பு | ராம் பொத்தினேனி படத்தில் மோகன்லால்? | மீண்டும் ரீ ரிலீஸ் ஆகும் பாட்ஷா! | ஜனவரி 17ல் தமிழில் வெளியாகும் பாலகிருஷ்ணாவின் 'டாக்கு மகாராஜ்' | முதல் நாள் வசூல்- வணங்கானை முந்திய விஷாலின் மதகஜராஜா! | 'ராஜா சாப்' படத்தில் சவாலான வேடத்தில் நடிக்கிறேன்! - மாளவிகா மோகனன் வெளியிட்ட தகவல் | புஷ்பா- 2 பாணியில் சினி டப்ஸ் ஆப்பில் வெளியாகும் 'கேம் சேஞ்ஜர்' | கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் 'பெருசு' |
பா ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா, பசுபதி, துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்து ஓடிடி தளத்தில் வெளிவந்த படம் 'சார்பட்டா பரம்பரை'. அப்படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அறிவிப்பை இரு தினங்களுக்கு முன்பு வெளியிட்டனர்.
ஆனால், அந்த அறிவிப்பில் படத்தின் இசையமைப்பாளர் பெயர் எதுவும் இடம் பெறவில்லை. முதல் பாகத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். அவரது பின்னணி இசையும், பாடல்களும் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் பின் 'எஞ்சாமி' பாடல் விவகாரத்தில் சந்தோஷ் நாராயணன், அறிவு இடையே சர்ச்சை ஏற்பட்டது. அதனால், பா ரஞ்சித் தனது அடுத்த படங்களுக்கு சந்தோஷ் நாராயணனை இசையமைக்க வைக்கவில்லை.
அதற்கடுத்து அவர் இயக்கிய “நட்சத்திரம் நகர்கிறது” படத்திற்கு தென்மா இசையமைத்திருந்தார். தற்போது விக்ரம் நடிக்க இயக்கி வரும் 'தங்கலான்' படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்து வருகிறார்.
'சார்பட்டா பரம்பரை 2' படத்தின் அறிவிப்பு வெளியானதுமே அதற்கு, இசையமைப்பாளர்கள் சாம் சிஎஸ் வாழ்த்து தெரிவித்திருந்தார். சந்தோஷ் நாராயணனும் பா.ரஞ்சித், ஆர்யா ஆகியோரை டுவிட்டரில் டேக் செய்து, “வானம் விடிஞ்சிருச்சு காசு டா மேளத்தை,” என பதிவிட்டுள்ளார். பகையை மறந்து இருவரும் மீண்டும் இணைந்து பணி புரிவார்களா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.