நானிக்காக அனிருத் பாடிய தானு பாடல் வெளியீடு | பீனிக்ஸ் வீழான் ஜூலை நான்காம் தேதி ரிலீஸ் | கேங்கர்ஸ் படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | விஜய் சேதுபதியுடன் மோதும் பஹத் பாசில் | சூர்யா 46வது படத்தின் படப்பிடிப்பு எப்போது | இட்லி கடை படத்தின் அப்டேட் தந்த அருண் விஜய் | மதகஜராஜா ; சுந்தர் சி சொன்ன வார்த்தை பலித்துவிட்டது : சந்தானம் | ஏப்., 30ல் கிஸ் முதல் பாடல் வெளியீடு | ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பாணியில் உருவாகியுள்ள நரிவேட்டை | தொடரும் படம் பார்க்க வந்த ரசிகர்களிடம் வீடியோ காலில் உரையாடிய மோகன்லால் |
தற்போது மடோன் அஸ்வின் இயக்கும் மாவீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்தில் அதிதி ஷங்கர் நாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார்.
இதற்கிடையே தர்பார் படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்திலும் நடிக்கப் போகிறார் சிவகார்த்திகேயன். அந்தப் படத்தை தான் இயக்குவதோடு தயாரிப்பதற்கும் திட்டமிட்டுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். இந்த நிலையில் கடைசியாக தான் நடித்து வெளியான பிரின்ஸ் படம் படுதோல்வி அடைந்ததால் ஏ.ஆர்.முருகதாஸ் தன்னை வைத்து தயாரித்து இயக்கும் படத்தில் நடிப்பதற்கு தனது சம்பளத்தில் ஐந்து கோடி ரூபாயை சிவகார்த்திகேயன் குறைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.