எமர்ஜென்சி படத்திற்கு பஞ்சாபில் தடை : கங்கனா கோபம் | 'விடாமுயற்சி' ரீமேக் உரிமை சிக்கலுக்குத் தீர்வு | ஷங்கருக்கு ஆதரவாகப் பேசினாரா தமன்? | ரசிகர்கள் கல் எறிய மாட்டார்கள் என நம்புகிறேன் : விஷால் | விரைவில் திரைக்கு வரும் தினேஷின் கருப்பு பல்சர் | விஜயகாந்த் படத்தின் தலைப்பில் நடிக்கிறாரா தனுஷ்? | சமரச பேச்சுவார்த்தை - ரவி மோகன், ஆர்த்தியின் விவாகரத்து வழக்கு தள்ளிவைப்பு | ரஜினியின் ஜெயிலர் 2 அறிமுக டீசரின் மேக்கிங் வீடியோ வெளியானது | இயக்குனர், தயாரிப்பாளர் ஜெயமுருகன் காலமானார் | விவசாயத்தின் முக்கியத்துவம் பேசும் 'மருதம்' |
கடந்த 2021ம் ஆண்டு அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உட்பட பலரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் புஷ்பா. இந்த படத்தில் சமந்தாவும் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடி இருந்தார். இந்தநிலையில் தற்போது புஷ்பா படத்தின் இரண்டாம் பாக படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த இரண்டாம் பாகத்திலும் முதல் பாகத்தில் நடித்த அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் நடித்து வரும் நிலையில், தற்போது சாய் பல்லவியும் இணைந்திருக்கிறார். கதைக்கு திருப்புமுனை தரக்கூடிய ஒரு கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். மேலும், தமிழில் கார்கி என்ற படத்தில் கடைசியாக நடித்த சாய் பல்லவி, தற்போது கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.