நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

திரிஷா இல்லேன்னா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன், தற்போது மார்க் ஆண்டனி என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஷால் நாயகனாகவும், எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும் நடிக்கிறார்கள். அதோடு இவர்கள் இருவருக்கும் இந்த படத்தில் இரட்டை வேடங்கள். ரித்து வர்மா நாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் கடந்த வாரத்தில் ஒரு விபத்து நடந்தது. ஆக்சன் காட்சி ஒன்று படமாக்கப்பட்ட போது லாரி கட்டுப்பாட்டை இழந்து ஓடியது. என்றாலும் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயங்கள் ஏற்படாமல் தப்பினார்கள். அது குறித்த வீடியோவை வெளியிட்டிருந்தார்கள்.
இந்த நிலையில் தற்போது மார்க் ஆண்டனி படப்பிடிப்பு ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. அங்கு லைட் கம்பம் சரிந்து விழுந்து லைட் மேன் ஒருவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மார்க் ஆண்டனி படப்பிடிப்பு தளத்தில் இப்படி அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவது படக் குழுவிற்கு பலத்த அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.