அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கேப்டன் மில்லர். தனுஷ் உடன் இணைந்து பிரியங்கா அருள் மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், ஜான் கொக்கன், நிவேதா சதீஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழியில் இப்படம் உருவாகி வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு குற்றாலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட துணை நடிகர்கள், நடிகைகள் மற்றும் கலைஞர்கள் கலந்துக் கொண்டு நடிக்கிறார்கள். தனுஷ், பிரியங்கா அருள் மோகன் மற்றும் ஜான் கொக்கைன் உள்ளிட்டோரின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது என தகவல் வெளியாகி உள்ளது.