‛கண்ணகி' படத்தின் டிரைலர் வெளியானது | இன்னும் ஒரு மாதம் காத்திருங்கள் - ஏ.ஆர்.முருகதாஸ் | கமல் உடன் இணைந்து நடிக்கும் கவுதம் கார்த்திக் | மீண்டும் அஜர்பைஜானுக்கு சென்ற விடாமுயற்சி படக்குழு | 3 படம் ரீ ரிலீஸ் குறித்து நெகிழ்ந்த தனுஷ் | பொங்கல் ரேஸிலிருந்து ஒதுங்கிய விஜய் தேவரகொண்டா படம் | யார் செத்தாலும் இந்த சண்டை சாகாது : கவனம் ஈர்க்கும் பைட் கிளப் டீசர் | ட்ரெயின் படத்தில் நடிக்கும் வெற்றிமாறன் | கமலின் ஆளவந்தான் ரீ-ரிலீஸ் : புதிய டிரைலர் வெளியானது | ஸ்ரேயா போட்டோ ஷுட்டுக்கு உதவி செய்த மகள் |
இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் காசேதான் கடவுளடா. கதாநாயகியாக ப்ரியா ஆனந்த் நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, கருணாகரன், ஊர்வசி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குனர் ஆர்.கண்ணனின் மசாலா பிக்ஸ் நிறுவனம் மற்றும் எம்கேஆர்பி புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் அனைத்து தயாரிப்பு பணிகள் முடிந்த நிலையில் இரு முறை ரிலீஸ் தேதி குறித்து அறிவிக்கப்பட்டும் இன்னும் இப்படம் வெளியாகவில்லை.
இந்த படத்தை தயாரிக்க ராஜ்மோகன் என்பவரிடம் 1.75 கோடி பைனான்ஸ் வாங்கியுள்ளார்கள். ஆனால் வாங்கிய பணத்தை இதுவரை திருப்பி செலுத்தவில்லை என கூறப்படுகிறது. அதனால் பைனான்சியர் சார்பில் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது பதிலளித்த பட தயாரிப்பு நிறுவனம், மனுதாரருக்கு தரவேண்டிய மீதித் தொகையை திருப்பித் தரும் வரை படத்தை திரையரங்கு மற்றும் ஓடிடியில் வெளியிட மாட்டோம் என்று உறுதியளித்துள்ளார்கள். இதனால் படம் வெளியாகவதில் சிக்கல் தொடர்ந்து வருகிறது.