இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
இயக்குனர் பி. வாசு இயக்கத்தில் 2005ம் ஆண்டு ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் சந்திரமுகி. இப்படம் 800 நாட்கள் திரையரங்குகளில் ஓடி வசூலில் சாதனை செய்தது. இப்போது சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் பி.வாசு.
சந்திரமுகி 2ம் பாகத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். இவருடன் இணைந்து கங்கனா ரணாவத், லட்சுமி மேனன், மகிமா நம்பியார், ஸ்ருஷ்டி டாங்கே, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு எம். எம். கீரவாணி இசையமைக்கிறார்.
தற்போது இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடக்கிறது. பிரமாண்டமான செட் அமைத்து படத்தின் ப்ளாஷ் பேக் மற்றும் பாடல் காட்சிகளை படமாக்கி வருகின்றனர். வேட்டையனாக ராகவா லாரன்ஸ் மற்றும் சந்திரமுகியாக கங்கனா நடிக்கின்றனர். இந்த படப்பிடிப்பில் கங்கனா இணைந்துள்ளார். படப்பிடிப்பிற்கு கங்கனா அலங்காரம் செய்யும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.