தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! | 20 கிலோ வெயிட் குறைத்த புகைப்படங்களை வெளியிட்ட நடிகை குஷ்பு! | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிக்கும் ராம் சரண் | விஜய் சினிமாவை விட்டு செல்லக் கூடாது : இயக்குனர் மிஷ்கின் வேண்டுகோள் | இருமுடி கட்டி சபரிமலை சென்ற நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் | வீர தீர சூரன் 2 : அடுத்த வாரம் ஓடிடி ரிலீஸ் | ஆங்கிலத்தில் பேசச் சொன்ன தொகுப்பாளர் : தமிழில்தான் பேசுவேன் என்ற அபிராமி | முதல் பட ஹீரோ ஸ்ரீ-க்கு ஆதரவாக லோகேஷ் கனகராஜ் | மொழிப்போர் நடக்குற நேரம்... இது எங்க மும்மொழித் திட்டம் : தக் லைப் பட விழாவில் கமல் பேச்சு | 'மண்டாடி' : சூரியின் அடுத்த படம் |
நடிகர் தனுஷ் தங்களுடைய மகன் என மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன் -மீனாட்சி தம்பதி மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை கடந்த 2017ம் ஆண்டு மதுரை ஐகோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டது. ஆனால், தனுஷ் தரப்பில் தாக்கல் செய்த பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் போலியானவை. இதற்காக அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று மதுரை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கதிரேசன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதை எதிர்த்து கதிரேசன் தம்பதிகள், மதுரை ஐகோர்ட்டில் குற்றவியல் சீராய்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ஏற்கனவே இந்த விவகாரம் குறித்த முந்தைய வழக்கு விசாரணையின் போது நடிகர் தனுஷ் மதுரை ஐகோர்ட்டில் ஆஜரானார். அப்போது அவரது உடலில் மச்சங்கள், தழும்புகள் போன்றவற்றை அரசு டாக்டர்கள் சரி பார்த்தனர். அந்த சமயத்தில் மதுரை ஐகோர்ட்டு பதிவாளராக நான் பணியாற்றியதால் இந்த வழக்கை தொடர்ந்து நான் விசாரிப்பது சரியாக இருக்காது. எனவே வேறு அமர்வுக்கு இந்த வழக்கை பரிந்துரைக்கிறேன். என்று கூறினார். இதை தொடர்ந்து இந்த வழக்கு வேறு நீதிபதி முன்பு விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.