Advertisement

சிறப்புச்செய்திகள்

தயாரிப்பாளர்களை குழியில் தள்ளும் இயக்குனர்கள் : சேரன் பரபரப்பு பேச்சு | விஜய் பட நடிகைக்கு நேரில் ஆஜராக நீதிமன்றம் பிடி வாரண்ட் | மம்முட்டி வாங்கி கொடுத்த 'ஹியரிங் எய்டு' கருவியை கழட்டி வீசிய தொழிலாளி | 'டூரிஸ்ட் பேமிலி' பாணி கதையில் ஹிந்தியில் நடிக்கும் பிரியாமணி | நானாக வாய்ப்பு கேட்ட ஒரே இயக்குனர் இவர்தான் ; மிருணாள் தாகூர் | பிளாஷ்பேக் : அக்கா அளவுக்கு சாதிக்க முடியாமல் போன தங்கை | சினிமாவிற்கு வரும் புதிய இரட்டை இசை அமைப்பாளர்கள் | 10 கோடி செலுத்த காலஅவகாசம் கேட்ட விஷால் மனு தள்ளுபடி | கடும் போட்டியில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் | சபரிமலை தங்கம் திருட்டு : அமலாக்கத்துறை முன் ஜெயராம் ஆஜர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அடுத்தடுத்து இரண்டு வழக்குகளில் விஜய்க்குப் பின்னடைவு

06 பிப், 2026 - 12:22 IST
எழுத்தின் அளவு:
Vijay-suffers-setback-in-two-consecutive-cases
Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வெளிவர உள்ள 'ஜனநாயகன்' படத்துடன் சினிமாவை விட்டு விலக உள்ளவர் விஜய். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்து இந்த வருடம் நடைபெற உள்ள தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட உள்ளார்.

பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி வெளியாவதாக இருந்த படம் 'ஜனநாயகன்'. ஆனால், தணிக்கை வாரியம் படத்திற்கு சான்றிதழ் தர காலதாமதம் செய்வதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உச்சநீதிமன்றம் வரை சென்று திரும்பிய அந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற அமர்வு கடந்த மாதம் 27ம் தேதி தீர்ப்பளித்தது. வழக்கை மீண்டும் தனி நீதிபதி நடத்த உத்தரவிட்டது. சுமார் 10 நாட்களாகியும் அந்த வழக்கு இன்னும் தனி நீதிபதி முன் பட்டியலிப்படவில்லை. இந்த வழக்கில் விஜய் தரப்பிற்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு சுமார் ஒரு மாத காலமாகியும் 'ஜனநாயகன்' பட வெளியீடு குறித்தோ, வழக்கு குறித்தே விஜய் தரப்பு இதுவரை வாயைத் திறக்கவில்லை. தயாரிப்பு நிறுவனமும் என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதை இதுவரை அறிவிக்கவில்லை.

இந்நிலையில் இன்று மற்றுமொரு வழக்கில் விஜய்க்கு மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 2015-16ம் நிதியாண்டில் 'புலி' படத்திற்காக வாங்கிய சம்பளத்தில் ரூ 15 கோடி சம்பளத்தை மறைத்ததாக வருமான வரித் துறை விஜய்க்கு 1.50 கோடி அபராதம் விதித்தது. அந்த அபராதத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் விஜய். இன்று அந்த வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், அபராதம் விதிக்கப்பட்டதில் எந்த விதிமுறையும் இல்லை என தீர்ப்பளித்துள்ளது. அதனால், அந்த அபராதத்தை தொகையை இப்போது விஜய் செலுத்தியாக வேண்டும்.

அடுத்தடுத்து இரண்டு வழக்குகளில் விஜய்க்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு அரசியல் ரீதியாக அவரது இமேஜுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே அவர் கலந்து கொண்ட கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் மரணமடைந்த வழக்கு சிபிஐ விசாரணையில் உள்ளது. அதற்காக அவர் இரண்டு முறை டில்லி சென்று விசாரணையில் பங்கேற்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இளையராஜா ஸ்டுடியோ முன் செல்பி எடுத்த தெலுங்கு இயக்குனர்இளையராஜா ஸ்டுடியோ முன் செல்பி ... தெலுங்கிலும் தமிழ் சினிமா 'காற்று' : ஒரே நாளில் 9 படங்கள் ரிலீஸ் தெலுங்கிலும் தமிழ் சினிமா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap