ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

ஷங்கர் - கமல் கூட்டணியில் உருவாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது இந்தியன்-2 என்கிற பெயரில் படமாகி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதன் படப்பிடிப்பு துவங்கியபோது இந்த படத்தில் மிக முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிகர் விவேக் நடித்து வந்தார். இத்தனை வருட திரையுலக பயணத்தில் அவர் கமலுடன் முதல்முறையாக இணைந்து நடித்ததும் இந்த படத்தில் தான். ஆனால் துரதிஷ்டவசமாக கொரோனா காலகட்டத்தில் அவர் மாரடைப்பால் காலமானார்.
இந்த நிலையில் அவருக்கு பதிலாக நடிகர் குரு சோமசுந்தரம் தற்போது இந்த படத்தில் நடித்து வருகிறார் என்ற தகவல் வெளியானது. அதனால் விவேக் நடித்த காட்சிகள் இந்த படத்தில் இடம்பெறாது என்றும் சொல்லப்பட்டு வந்தது. இந்தநிலையில் தற்போது விவேக் சம்பந்தப்பட்ட காட்சிகள் நிச்சயமாக படத்தில் இடம்பெறும் என்றும் விவேக்கின் குரலுக்கு பொருந்தும் விதமான டப்பிங் கலைஞரை வைத்து அவரது காட்சிகள் நிறைவு செய்யப்படும் என்றும் தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் விவேக் இந்தியன்-2 படத்தில் தன்னுடைய காட்சிகளை முழுமையாக நிறைவு செய்து விட்டாரா, அப்படி என்றால் குரு சோமசுந்தரம் இந்த படத்தில் இணைந்தது வேறு ஒரு கதாபாத்திரத்திற்காகவா என்கிற கேள்விகள் புதிதாக எழுந்துள்ளன. இந்த படத்தில் விவேக் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.