ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் பட ரிலீஸ் எப்போது? | எங்களை பிரித்தது அந்த மூன்றாவது நபரே : கெனிஷாவை சாடும் ஆர்த்தி ரவி | ஹிந்தி பட ரீமேக்கில் நடிக்கும் துருவ் விக்ரம் | சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய சூரி | அமெரிக்காவில் தெலுங்கு கலாச்சார விழாவில் பங்கேற்கும் அல்லு அர்ஜுன் | ''எல்லாமே முதன்முறை... பிகினியும் கூட...'': 'வார் 2' பற்றி கியாரா அத்வானி | மணிரத்னம் படத்தில் ருக்மணி வசந்த் | ஆதி படத்தில் இணையும் மிஷ்கின்? | மே 23ம் தேதியிலும் அதிகப் படங்கள் ரிலீஸ் | வழக்கமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை : பிக்பாஸ் அர்ச்சனா |
ஆக் ஷன் பிரியர்களை மகிழ்விக்கும் விதமாக தெலுங்கில் வெற்றிபெற்ற ‛வீர சிம்ஹா ரெட்டி' படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் இப்போது வெளியாகி உள்ளது.
தெலுங்கு சினிமாவின் ‛ஆக் ஷன்' ஸ்டார் நந்தமுரி பாலகிருஷ்ணா. இந்த சங்கராந்தி பண்டிகைக்கு அவரது நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன படம் ‛வீர சிம்ஹா ரெட்டி'. பாலகிருஷ்ணா உடன் ஸ்ருதிஹாசன், ஹனிரோஸ், வரலட்சுமி உள்ளிட்டோர் நடித்தனர். கோபிசந்த் மாலினேனி இயக்கி இருந்தார். வீரசிம்ஹா ரெட்டி, ஜெயசிம்ஹாச ரெட்டி என இரண்டு வேடங்களில் நடித்திருந்தார் பாலகிருஷ்ணா.
ஆக்ஷன் மட்டுமல்லாது குடும்பங்களை கவரும் எமோஷனல் படமாகவும் வெளிவந்தது. ராயல்சீமா நலனுக்காக பாலகிருஷ்ணாவின் போராட்டாமும், இதயத்தை தொடும் உணர்வுப்பூர்வமான திரைக்கதையும் தான் படத்தின் விறுவிறுப்பான கதைக்களம். ஆக்ஷன், எமோஷன் என அனைத்து கமர்ஷியல் அம்சங்களும் நிறைந்த பொழுபோக்கு படமாக வெளியான "வீர சிம்ஹா ரெட்டி" படத்தின் ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களை இருக்கையின் நுனியில் வைத்திருக்கும்.
இந்தப்படம் இப்போது ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகி உள்ளது. தெலுங்கு மட்டுமல்லாது தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகி உள்ளது. நிச்சயம் பார்வையாளர்களுக்குப் குறிப்பாக ஆக்ஷன் பிரியர்களுக்கு இந்தப்படம் பிரமிப்பை ஏற்படுத்தும். எனவே இந்த பிளாக்பஸ்டர் படத்தை தவறவிடாதீர்கள். உடனடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் காணுங்கள்...