சினிமாவிற்கு வரும் புதிய இரட்டை இசை அமைப்பாளர்கள் | 10 கோடி செலுத்த காலஅவகாசம் கேட்ட விஷால் மனு தள்ளுபடி | கடும் போட்டியில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் | சபரிமலை தங்கம் திருட்டு : அமலாக்கத்துறை முன் ஜெயராம் ஆஜர் | முதல்வரை சந்தித்த ரஜினி மகள் சவுந்தர்யா | ஏப்ரல் 27ல் 'தாய் கிழவி', தடங்கல் இல்லாமல் வெளியாகுமா? | ஏழுமலை 2ம் பாகம் பணியில் அர்ஜூன் | சென்னையில் 3 தெருக்களுக்கு இசைக் கலைஞர்கள் பெயர் | விஜய் , சிம்பு குறித்து பகிர்ந்த சீமான் | அல்லு அர்ஜுன் பற்றிய பேச்சு: வெளிப்படையாக மன்னிப்பு கேட்ட காவேரி பரூவா |

இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். அதைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக நடித்து வந்தவர் தற்போது குறைந்த அளவிலான படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இதற்கிடையே ஒவ்வொரு காலகட்டத்திலும் ஸ்ருதிஹாசன், சமந்தா என தன்னுடன் இணைந்து நடிக்கும் நடிகைகள் யாராவது ஒருவருடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டு வந்தார்.
அந்தவகையில் சமீபத்தில் வெளியான மகா சமுத்திரம் என்கிற படத்தில் அவருடன் இணைந்து நடித்த நடிகை அதிதி ராவ் ஹைதரியுடன் மிகுந்த நெருக்கம் காட்டி வருகிறார் சித்தார்த். இவர்கள் இருவரும் காதலித்து வருகிறார்கள் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில் அதை உறுதி செய்வது போல இருவரும் பொதுவெளியில் ஜோடியாக வலம் வருகிறார்கள். பல திரைப்பட நிகழ்வுகளிலும் இணைந்து கலந்து கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் தற்போது மும்பையில் உள்ள ரெஸ்டாரன்ட் ஒன்றில் உணவருந்துவதற்காக ஒரே காரில் ஒன்றாக வந்த இருவரையும் அங்கிருந்த புகைப்பட கலைஞர்கள் படம் பிடித்தனர். அதிதிராவ் அவர்களுக்கு நன்றாக போஸ் கொடுக்க, நடிகர் சித்தார்த்தோ வழக்கம் போல தனது முகத்தை மாஸ்க்கால் மூடியபடி விறுவிறுவென ரெஸ்டாரண்டுக்குள் சென்று விட்டார். கொரோனா காலகட்டம் முடிந்து பெரும்பாலானோர் அனைவரும் மாஸ்க் அணியாமல் தைரியமாக வலம்வரும் நிலையில், நடிகர் சித்தார்த் மட்டும் இன்னும் மாஸ்க்குடன் வலம் வருவது குறித்து திரையுலகிலேயே பலரும் கிண்டலாக விமர்சித்து வருகிறார்கள்.