'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி |
வினோத் இயக்கத்தில், அஜித், மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடித்த 'துணிவு' படம் கடந்த மாதம் பொங்கலை முன்னிட்டு வெளியானது. கடந்த வாரம் இந்தப் படம் ஐந்து மொழிகளில் ஓடிடி தளத்தில் வெளியானது. அப்போதே ஆங்கிலம் அல்லாத மற்ற மொழிப் படங்களில் டாப் 10ல் தமிழ் பதிப்பு, ஹிந்திப் பதிப்பு ஆகியவை முதலிரண்டு இடங்களைப் பிடித்தது.
உலக அளவிலான டாப் 10ல் 'துணிவு' தமிழ் 3ம் இடத்தையும், 'துணிவு' ஹிந்தி 4ம் இடத்தையும் பிடித்துள்ளது. தமிழ் பதிப்பை இதுவரையில் 4.05 மில்லியன் மணி நேரமும், ஹிந்தி பதிப்பை 3.73 மில்லியன் மணி நேரம் கடந்த வாரம் உலக அளவில் பார்த்துள்ளார்கள்.
இந்திய டாப் 10ஐப் பொறுத்தவரையில் 'துணிவு' ஹிந்தி 1ம் இடத்திலும், தமிழ் 2ம் இடத்திலும், தெலுங்கு 4ம் இடத்திலும் உள்ளது. ஓடிடிக்கு மிகவும் உகந்த ஒரு படமாக 'துணிவு' படம் இருப்பதாக ஓடிடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இனி வரும் நாட்களிலும் இந்தப் படம் அதிக அளவில் பார்க்கப்படும் என்கிறார்கள்.