'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் | பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” | சினிமா ஆன பெண் குல தெய்வங்களின் கதை | தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் | மீண்டும் வெளிவரும் 'இதயக்கனி' | ஹாரர், திரில்லராக உருவாகும் 'தி பிளாக் பைபிள்' | பிளாஷ்பேக் : பாடல்களுக்காக உருவான படம் |
காதலர் தினத்தை முன்னிட்டு திரையுலக நட்சத்திரங்கள் பலரும் தங்களது காதல் குறித்து சூசகமாகவும் பலர் வெளிப்படையாகவும் தங்களது காதலர்களை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தி வருகின்றனர். இன்னும் சிலரோ வெளிப்படையாக காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டாலும் அதுகுறித்து எந்தவித குறிப்பையும் இந்த காதலர் தினத்தில் வெளிக்காட்டாமல் அமைதியாக இருந்ததையும் பார்க்க முடிந்தது.
இந்த நிலையில் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் 54 வயதான பாலிவுட் நடிகை அனு அகர்வால் தனக்கும் ஒரு ரிலேஷன்ஷிப் உண்டு என்பதையும் கடந்த 30 வருடங்களாக ஒருவரை காதலித்து வருகிறேன் என்றும் கூறி ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
1996 வரையிலான எட்டு வருடங்கள் மட்டுமே சினிமாவில் நடித்த இவர் தமிழில் 1994ல் மணிரத்னம் இயக்கத்தில் பிரசாந்த் நடிப்பில் வெளியான திருடா திருடா என்கிற படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார். அந்த படத்தில் இடம்பெற்றிருந்த சந்திரலேகா என்கிற பாடலுக்கு இவர் ஆடிய ஆட்டம் அப்போது ரசிகர்களிடம் ரொம்பவே பிரசித்தம்.
தான் காதலிப்பதை தற்போது இவர் வெளிப்படையாக கூறினாலும் தனது காதலர் யார் என்பது பற்றி தெரிவிக்காமல் சஸ்பென்ஸை நீட்டித்துள்ளார். அதேசமயம் 30 வருடங்களுக்கு மேலாக அவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும் இந்தியாவில் மட்டுமல்ல வேறு எங்கும் அவரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் அவ்வப்போது சந்தித்து வருவதாகவும் கூறியுள்ளார் அனு அகர்வால். மேலும் அவரை திருமணம் செய்வேனா என தெரியவில்லை. அதற்கு வாய்ப்பு இல்லை என்கிற பாணியில் தெரிவித்துள்ளார்.