பிளாஷ்பேக்': சினிமாவில் ஜெயிக்க முடியாத லட்சிய நடிகரின் மகன் | பிளாஷ்பேக் : ஹேமமாலினிக்கு செட்ட ஆகாத தமிழ் சினிமா | செல்வராகவன் அக்காவாக மாறிய கவுசல்யா | திருவண்ணாமலையில் படமாக்கப்பட்ட 'கொலைச் சேவல்' | ஓடிடியில் டாப் 2ல் 'வித் லவ்' | 'துரந்தர் 2' பிரிமியர்: தமிழகத்தில் சிறப்பான முன்பதிவு | எம்ஜிஆர் பற்றி 'கிண்டலாக' பேசிய தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் | மார்ச் 18ல் 'அல்லு சினிமாஸ்' ஆரம்பம் | தயாரிப்பாளர் தக்காளி சீனிவாசன் காலமானார் | போர் சூழலுக்கு மத்தியில் சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார் |

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தில் மொழிக்கு ஒருவர் என மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், தெலுங்கு நடிகர் சுனில் என பலரும் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.
கடந்த மாதத்திலேயே ஐதராபாத், ஜெய்சல்மர் என வெவ்வேறு லொக்கேஷன்களில் நடந்து வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மங்களூரில் நடைபெற்று வருகிறது. ஐதராபாத்தில் மோகன்லாலுடனும் ஜெய்செல்மரில் ஜாக்கி ஷெராப்புடனும் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. ஏற்கனவே சென்னையில் சிவராஜ்குமார் நடித்த சில காட்சிகள் படமாக்கப்பட்டது.
தற்போது மங்களூருவில் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் சிவராஜ்குமார் இருவரும் இணைந்து நடிக்கும் முக்கியமான சண்டைக்காட்சி படமாக்கப்படுகிறது. ஷூட்டிங் முடிந்து இரவு நேரத்தில் ரஜினிகாந்த் மற்றும் சிவராஜ்குமார் இருவரும் இணைந்து ரிலாக்ஸாக பேசிக்கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி இதை உறுதிப்படுத்தி உள்ளது.