காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
ஹிந்தியில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாரூக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆபிரஹாம் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‛பதான்'. பாய்காட், காவி சர்ச்சை போன்ற எதிர்ப்புகளை தாண்டி படம் உலகளவில் ரூ.800 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்துள்ளது. இது ஷாரூக்கானை மட்டுமல்ல பாலிவுட் திரையுலகினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. காரணம் கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட் திரையுலகம் வசூலில் தடுமாறி வந்த நிலையில் இந்த படத்தின் வசூல் அனைவருக்கும் புது தெம்பை வழங்கி உள்ளது.
இந்த படத்திற்கு பல்வேறு திரையுலகினரும் ஆதரவு கொடுத்தனர். நடிகர் கமல்ஹாசனும் இந்த படம் வெளியானது முதல் வசூலில் சாதனை புரிந்தது வரை தனது ஆதரவை தெரிவித்து வந்தார். இந்நிலையில் பதான் படத்தை சென்னையில் உள்ள தியேட்டர் ஒன்றில் பார்த்துள்ளார். சிறப்பு காட்சியாக திரையிடப்பட்ட இந்த படத்தை அவருடன் 80களின் நாயகிகளான ஜெயஸ்ரீ, ஷோபனா மற்றும் சுஹாசினி ஆகியோரும் படம் பார்த்துள்ளனர். இந்த போட்டோவை பகிர்ந்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார் நடிகை ஜெயஸ்ரீ.