சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
"இதுதாண்டா போலீஸ்", "எவன்டா உங்க எம்.எல்.ஏ" உள்பட பல படங்களில் நடித்தவர் டாக்டர் ராஜசேகர். தெலுங்கில் சீனியர் நடிகர். டாக்டர் ராஜசேகர்-நடிகை ஜீவிதா தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள். அவர்களில் மூத்தவர் ஷிவானி. தந்தையைப் போலவே மருத்துவம் படித்து வருகிறார். ஆக்ஷன் கிங் அர்ஜுன் தன் மகளை சினிமாவில் அறிமுகப்படுத்துவதை தொடர்ந்து, தெலுங்கு ஆக்ஷன் கிங் டாக்டர் ராஜசேகர் தன் மகளை சினிமாவில் அறிமுகப்படுத்துகிறார். தெலுங்கு படம் ஒன்றில் அவர் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அந்தப் படத்தில் ராஜசேகரும் நடிக்கிறார். இப்போதைக்கு படம் பற்றிய செய்திகளை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனாலும் ஷிவானி தற்போது நடிப்பு பயிற்சி பெற்று வருகிறார். சென்னையில் தங்கியிருக்கும் ஷிவானிக்கு கூத்துப் பட்டறையிலிருந்து வந்து பயிற்சி அளிக்கிறார்கள். நடனமும் கற்று வருகிறார்.