‛பொன்னியின் செல்வன் 2' : ‛அக நக' முதல்பாடல் வெளியானது | அதிதி ஷங்கரின் அடுத்த படம் | தனுசுடன் மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் | விஜய் சேதுபதியை இயக்கும் மிஷ்கின் | இயற்கை விவசாயத்தில் இறங்கிய நடிகர் கிஷோர் | படப்பிடிப்பில் தவறாக நடந்தாரா யஷ்? - ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம் | நிதின் பிறந்தநாள் அன்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் | விஷ்ணுவர்தன் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது | ரிலீஸுக்கு தயாராகும் வணங்காமுடி ; டப்பிங் பணிகள் தீவிரம் | தன்னுடன் ஜோடியாக நடித்த நடிகையை பிளாக் செய்து பின் அன்பிளாக் செய்த அல்லு அர்ஜுன் |
மாநகரம் படத்தின் மூலம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு நடிகராக மாறினார் சந்தீப் கிஷன். ஆனால் அடுத்தடுத்து அவர் நடித்த படங்கள் பெரிய அளவில் கவனம் ஈர்க்கத் தவறின. இந்த நிலையில் தற்போது ரஞ்சித் ஜெயக்கொடி டைரக்ஷனில் அவர் கதாநாயகனாக நடித்துள்ள மைக்கேல் திரைப்படம் வரும் பிப்ரவரி 3 (நாளை) வெளியாகிறது. இந்த படத்தில் விஜய்சேதுபதியும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் வழங்குகிறார். இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் போஸ்டர்களை பார்த்து சந்தீப் கிஷனிடம் நேரடியாகவே பாராட்டியுள்ளார் நடிகர் விஜய்.
தளபதி 67 படத்திற்கான பூஜை நடைபெற்றபோது அதில் கலந்து கொண்ட சந்தீப் கிஷனும் விஜய்யை நேரில் சந்தித்துள்ளார். அப்போது மைக்கேல் படத்தின் டிரைலர் மற்றும் போஸ்டர் குறித்து பாராட்டியதுடன் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் விஜய். அப்போது விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள சந்தீப் கிஷன், “மைக்கேல் படத்திற்காக அன்பையும் ஆதரவையும் தெரிவித்த உங்களுடைய அன்பான வார்த்தைகளுக்கு நன்றி அன்புள்ள தளபதி.. இவ்வளவு எளிமையாகவும் உற்சாக தூண்டுதலாகவும் நீங்கள் இருப்பதற்கு லவ் யூ அண்ணா” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.