‛பொன்னியின் செல்வன் 2' : ‛அக நக' முதல்பாடல் வெளியானது | அதிதி ஷங்கரின் அடுத்த படம் | தனுசுடன் மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் | விஜய் சேதுபதியை இயக்கும் மிஷ்கின் | இயற்கை விவசாயத்தில் இறங்கிய நடிகர் கிஷோர் | படப்பிடிப்பில் தவறாக நடந்தாரா யஷ்? - ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம் | நிதின் பிறந்தநாள் அன்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் | விஷ்ணுவர்தன் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது | ரிலீஸுக்கு தயாராகும் வணங்காமுடி ; டப்பிங் பணிகள் தீவிரம் | தன்னுடன் ஜோடியாக நடித்த நடிகையை பிளாக் செய்து பின் அன்பிளாக் செய்த அல்லு அர்ஜுன் |
லென்ஸ் படத்தை இயக்கிய ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கி உள்ள படம் தலைக்கூத்தல். தமிழக கிராமங்களில் கோமா நிலைக்கு சென்று விட்ட முதியவர்களை கருணை கொலை செய்யும் தலைக்கூத்தல் வழக்கத்தை கதை களமாக கொண்டு வெளிவர இருக்கிறது. இதில் சமுத்திரகனி, வசுந்தரா, கதிர் நடித்துள்ளனர். இவர்களுடன் வங்காள நடிகை கத நந்தியும் நடித்துள்ளார்.
மாடல் அழகியான இவர் வங்கமொழி படங்களில் 2018ம் ஆண்டு முதல் நடித்து வருகிறார். ஏராளமான குறும்படங்களிலும் நடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கிறவர். அடிக்கடி கவர்ச்சி படங்களையும் வெளியிடுவார். தலைக்கூத்தல் படத்தில் கதிரின் காதலியாக பேச்சி என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார். இவர் தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை பிடிப்பாரா என்பது விரைவில் தெரியும். இதற்கிடையில் லிஜோ ஜோஸ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் மலைக்கோட்டை வாலிபன் படத்திலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.