திரைப்பட தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார் | ரஜினி 170வது படத்தில் இணைந்த மஞ்சு வாரியர் | அக்., 5ல் ‛லியோ' டிரைலர் வெளியீடு | வாழை படத்தை எதிர்பார்க்கும் திவ்யா துரைசாமி | 'லியோ' வெளியீட்டிற்குப் பிறகு 'விஜய் 68' பூஜை புகைப்படங்கள் | சர்வதேச திரைப்பட விழாக்களில் ஸ்ருதிஹாசனின் ‛தி ஐ' ஹாலிவுட் படம் | ரஜினி 170வது படத்தில் இணைந்த ரித்திகா சிங் | ‛சித்தா' மிகச்சிறந்த சினிமா : கோவையில் சித்தார்த் நம்பிக்கை | விஜய் 68ல் உள்ள முதல் பாடலின் சிறப்பு அம்சம் | ஒன் டூ ஒன் முதல் பார்வை வெளியீடு |
செல்லமே படத்தில் அறிமுகமான விஷால் மளமளவென பல வெற்றிகளை கொடுத்தார். சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, இரும்புத்திரை, துப்பறிவாளன் என அவரது பாதையில் வெற்றி படங்கள் அதிகம். விஷால் பிலிம் பேக்டரி ஆரம்பித்து அதில் பல படங்களை தயாரித்தார். சில படங்கள் வெற்றி பெற, பல படங்கள் தோல்வி அடைய இப்போது கடன் சுமையிலும் இருக்கிறார். சமீபகாலமாக விஷால் தொடர் தோல்வி படங்களை கொடுத்து வருகிறார். தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் மார்க் ஆண்டனி படத்தில் நடித்து வருகிறார். அடுத்து துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தை இயக்கி, நடிக்கிறார்.
அவரது சினிமா கேரியர் எப்படி இருந்தாலும் தனது தாயாரின் பெயரில் நடத்தி வரும் அறக்கட்டளை மூலமாக பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். அதோடு அடிக்கடி வித்தியாசமாக எதையாவது செய்து கவனிக்க வைக்கிறார். இந்நிலையில் தனது நெஞ்சில் மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி. ஆரின் முகத்தை பச்சை குத்தியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.