பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
சினிமாக்களில் புகை பிடிக்கும் காட்சிகள், மது அருந்தும் காட்சிகள் வந்தால் எச்சரிக்கை வாசகங்கள் இடம் பெற வேண்டும் என்பது கடந்த சில வருடங்களாக அமல்படுத்தப்பட்டு அது தொடர்ந்து நடந்து வருகிறது. அதே சமயம் சில நடிகர்கள் சமூக அக்கறையுடன் பொது வெளியில் பேசினாலும், சினிமாக்களில் நடிக்கும் போது புகை பிடிப்பது, மது அருந்துவது உள்ளிட்ட காட்சிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார்கள். ஒரு சிலர் மட்டும் அம்மாதிரியான காட்சிகளில் நடிப்பதில்லை.
படத்தின் விளம்பர போஸ்டர்களில் சில நடிகர்கள் புகை பிடிக்கும் காட்சிகள் இடம் பெறுவதும் உண்டு. தனுஷின் முந்தைய சில போஸ்டர்கள் இப்படி சர்ச்சையைக் கிளப்பின. 'சர்க்கார்' படத்தில் விஜய்யின் புகை பிடிக்கும் போஸ்டர் வெளியான போது பெரும் சர்ச்சை எழுந்தது. கடந்த வருடம் 'லவ் டுடே' படத்தின் போஸ்டர்களில் கூட நாயகன் புகை பிடிக்கும் போஸ்டர் வெளியிடப்பட்டு இருந்தது.
இன்று சுந்தீப் கிஷன், விஜய் சேதுபதி மற்றும் பலர் நடிக்கும் 'மைக்கேல்' படத்தின் டிரைலர் வெளியீட்டுப் போஸ்டரில் விஜய் சேதுபதி சுருட்டு புகைக்கும் போஸ்டர் இடம் பெற்றுள்ளது. இம்மாதிரியான போஸ்டர்களை சமூக அக்கறை இல்லாமல் படக்குழுவினர் வெளியிடுவதையும், அம்மாதிரி போஸ் கொடுக்கும் ஹீரோக்களையும் சமூக ஆர்வலர்கள் கண்டிப்பது வழக்கமாக நடந்து வருகிறது. ,இப்படியான போஸ்டர்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் சொல்லி வருகிறார்கள். இருப்பினும் ஒரு சில ஹீரோக்கள்தான் தங்களைத் திருத்திக் கொண்டு அதைத் தவிர்க்கிறார்கள். இதில் விஜய் சேதுபதி என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.