பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் | அருண் விஜய் படத்திற்கு பாடல் பாடிய தனுஷ் | அமெரிக்காவில் ஏப்., 9ல் குட் பேட் அக்லி பிரீமியர் காட்சி | முதல் கடார் என் சினிமாவை மூடியது... இண்டாவது கடார் திறந்து வைத்தது : சன்னி தியோல் | அண்ணன் கடனை என்னால் அடைக்க முடியாது: கோர்டில் நடிகர் பிரபு தகவல் | பிளாஷ்பேக்: சமகாலத்தில் எடுக்கப்பட்டு சாதனையையும், வேதனையையும் சந்தித்த இரண்டு “ஞானசௌந்தரி”கள் | 'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா |
பாலிவுட்டின் பிரபல பின்னணிப் பாடகி அல்கா யாக்னிக். 2022ம் ஆண்டில் யு டியுபில் அதிக முறை பார்க்கப்பட்ட பாடல்களில் அவரது பாடல்கள் புதிய சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் அவர் பாடிய பாடல்கள் 15.3 பில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. ஒரு நாளைக்கு சராசரியாக 42 மில்லியன்கள்.
56 வயதான அல்கா யாக்னின் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து சாதனை படைத்து வருகிறார். 2020ம் ஆண்டில் 16.6 பில்லியன், 2021ம் ஆண்டில் 17 பில்லியன் சாதனைகளை படைத்துள்ளார்.
2022ம் ஆண்டில் 14.7 பில்லியன் சாதனையைப் படைத்து இரண்டாம் இடத்தைப் பெறுகிறார் போர்ட்டோரிகா நாட்டின் பேட் பன்னி. இந்தியாவைச் சேர்ந்த பின்னணிப் பாடகர்களான உதித் நாராயண் 10.8 பில்லியன், அர்ஜித் சிங் 10.7 பில்லியன், குமார் சானு 9.09 பில்லியன் பெற்று டாப் 5ல் இடம் பிடித்துள்ளனர்.
20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை கடந்த 40 வருடங்களாகப் பாடியுள்ளார் அல்கா. 7 முறை சிறந்த பாடகிக்கான பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார். இந்தியாவில் 12.3 பில்லியனையும், பாகிஸ்தானில் 683 மில்லியனையும் கடந்த ஆண்டில் பெற்றுள்ளார்.
யு டியுபைப் பார்ப்பவர்களைப் பொறுத்தவரையில் உலக அளவில் 25 சதவீதத்தினர். ஆசியாவைச் சேர்ந்தவர்கள் 45 சதவீதத்தினர் யு டியுபைப் பார்த்து வருகிறார்கள்.
1980ல் வெளிவந்த 'பாயர் கி ஜான்கார்' என்ற படத்தில் முதன் முதலில் பாடினார் அல்கா. அதன்பின் 1981ல் அமிதாப் நடித்து வெளிவந்த 'லாவாரிஸ்' படத்தின் பாடலான 'மேரே அன்கன் மேய்னே' பாடல் அவரைப் பிரபலமாக்கியது. 1988ல் வெளிவந்த 'தேசாப்' படத்தில் இடம் பெற்ற 'ஏக் தோ தீன்' பாடல் அவரை பல மொழி ரசிகர்களிடத்திலும் கொண்டு போய் சேர்த்தது. ஹிந்தியில் பல சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார் அல்கா.