சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் |
தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகரான மோகன் பாபுவின் இளைய மகன் மனோஜ் மஞ்சு. இவரது அண்ணன் விஷ்ணு மஞ்சுவும், அக்கா லட்சுமி மஞ்சுவும் தொடர்ந்து நடித்து வருகிறார்கள். இவரும் படங்களில் நடித்து வந்தார். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக படங்கள் எதிலும் நடிக்காமல் இருந்தார்.
தற்போது வாட் தி பிஷ் என்ற படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். சிக்ஸ்த் சினிமா நிறுவனம் தயாரிக்கிறது. அறிமுக இயக்குனர் வருண் இயக்குகிறார். பெரிய பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக உருவாகிறது. இதன் படப்பிடிப்புகள் கனடா மற்றும் டொரோண்டோ நகரங்களில் 75 நாட்கள் நடக்கவுள்ளது. படத்தில் உலகளாவிய முன்னணி நடிகர்களும் கலைஞர்களும் பங்கு கொள்ளவுள்ளனர். அவர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது. சூப்பர் ஹீரோ பாணியில் உருவாகும் படம்.