சிக்கந்தர் தோல்விக்கு காரணம் முருகதாஸா ? சல்மான் கானா ? ; ராஷ்மிகா பதில் | 'சர்வம் மாயா' இயக்குனரின் அடுத்த படத்திலும் இணையும் நிவின்பாலி | வந்தே மாதரம் பாடலை பாட ஏ.ஆர் ரஹ்மான் மறுத்தாரா ? சின்மயி பதில் | மோகன்லால் படத்தை இயக்கும் பஹத் பாசிலின் ஆஸ்தான இயக்குனர் | நடிகரை அறைந்தாரா பூஜா ஹெக்டே? தீயாக பரவும் செய்தி | ஏப்ரல் 30ல் திரைக்கு வரும் தனுஷின் 'கர'? | ஓடிடியில் ஹிந்தியில் மட்டுமே வெளியான 'பாகுபலி தி எபிக்' | 'பார்டர்-2' படத்துடன் வெளியாகும் துரந்தர் -2 படத்தின் டீசர்! | ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த மெஹபூபா முப்தி! | மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரிகிடா சகா! |

புதுமுகங்கள் நடித்துள்ள வெப் தொடர் எங்க ஹாஸ்டல். சதீஷ் சந்திரசேகர் இயக்கி உள்ளார். சச்சின் நாச்சியப்பன், அவினாஷ் ரமேஷ், சம்யுக்தா விஷ்வநாதன், சரண்யா ரவிச்சந்திரன், கெளதம் ராஜ் மற்றும் டிராவிட் செல்வம் உள்ளிட்ட அறிமுக நடிகர்கள் நடிக்கிறார்கள். கல்லூரி ஹாஸ்டல் கலாட்டாக்களை மையமாக கொண்டு உருவாகி உள்ள கமெடி வெப் சீரிஸ் இது. அமேசான் தளத்தில் வெளியாகிறது.
தொடர் குறித்து அதன் தயாரிப்பாளர் ஷ்ரேயான்ஷ் பாண்டே கூறும்போது “எங்க ஹாஸ்டல் இணையத் தொடர் தமிழ்நாடு ஹாஸ்டலில் உள்ள மாணவர்களது வாழ்க்கையில் எது போன்ற ஒரு அங்கம் வகிக்கிறது, அது எப்படி அவர்களது வாழ்க்கையை மாற்றுகிறது என்பதை நகைச்சுவையாக படமாக்கியுள்ளோம். நம் உள்ளூர் கலாச்சாரத்தில் வேரூன்றி இருக்கும் இந்தத் தொடரின் பார்வை, எமோஷன் என எல்லாமே வேறாக இருக்கும்” என்றார்.




