ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
சலார், ஆதிபுருஷ், புராஜெக்ட் கே போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார் பிரபாஸ். இதில் கேஜிஎப் படத்தின் இயக்குனரான பிரசாந்த் நீல் இயக்கத்தில் அவர் நடித்து வரும் சலார் படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. ஸ்ருதிஹாசன் நாயகியாக நடித்து வரும் இந்த படத்தின் சண்டைக் காட்சி ஒன்று தற்போது ஐதராபாத்தில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த இரவு ஆக்க்ஷன் காட்சியை குறைந்த வெளிச்சம் கொண்ட காட்சிகளாக படமாக்கி வருகிறார் பிரசாந்த் நீல். இந்த சண்டை காட்சி படமாக்கப்பட்டு முடிந்ததும் சலார் படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்து விடும் என்று படக்குழு அறிவித்திருக்கிறது . அதோடு இந்த ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி இந்த சலார் படம் திரைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.