‛பிக்பாஸ் சீசன் 8' - கமலுக்கு பதில் களமிறங்கிய விஜய் சேதுபதி : கோலாகலமாய் துவங்கியது | சிவகார்த்திகேயனுக்கு விஜய் அளித்த காஸ்ட்லி வாட்ச்! | ஜூனியர் என்டிஆர்.,-ஐ இயக்கும் நெல்சன்? | வெறுப்பு செய்தி! - நெட்டிசன்களுக்கு பிரியாமணி வைத்த வேண்டுகோள்!! | அக்டோபர் 18ல் வெளியாகும் விமலின் ‛சார்' | கால்பந்து போட்டியை நேரில் பார்க்க ஸ்பெயின் நாட்டுக்கு சென்ற ஷாலினி அஜித் - ஆத்விக்! | கவர்ச்சியாக உடலை காட்டக்கூடாது என்பதில் உறுதி: பிரியா பவானி சங்கர் ‛ஓபன் டாக்' | ‛மும்பையில் பிறந்தாலும் மனசுல தமிழ் பொண்ணுதான்': ஹன்சிகா திடீர் மதுரை விசிட் | கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் இதோ! | பில்லா, அசல் வரிசையில் ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த பிரபு |
விஜய் நடித்த 'வாரிசு', அஜித் நடித்த 'துணிவு' ஆகிய இரண்டு படங்களும் ஜனவரி 11ம் தேதி ஒரே நாளில் தியேட்டர்களில் வெளியாகின. படம் வெளியாகி பத்து நாட்கள் ஆகியும் இரண்டு படங்களில் எந்தப் படம் அதிக வசூலைக் குவித்தது, எந்தப் படம் லாபத்தைக் கொடுத்தது என்ற சண்டைகள் சமூக வலைத்தளங்களில் போய்க் கொண்டிருக்கின்றன.
தியேட்டர்களில் போட்டி, வசூலில் போட்டி என சென்ற நிலையில் அடுத்ததாக இரண்டு படங்களும் ஓடிடியிலும் போட்டி போட உள்ளதாகத் தெரிகிறது. இரண்டு படங்களுமே பிப்ரவரி 10ம் தேதி ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
'வாரிசு' படத்தை அமேசான் பிரைம் தளமும், 'துணிவு' படத்தை நெட்பிளிக்ஸ் தளமும் வாங்கியுள்ளன. இரண்டுமே முன்னணி ஓடிடி தளங்கள் என்பதால் படத்தை அதிக ரசிகர்கள் பார்க்கும் விதத்தில் பரபரப்பை ஏற்படுத்துவார்கள். வசூல் சண்டையே இன்னும் முடியாத நிலையில் அடுத்து எந்தப் படம் ஓடிடி தளத்தில் அதிக நேரம் பார்க்கப்படுகிறது என்ற சண்டை அடுத்த மாதம் புதிதாக ஆரம்பமாகும்.