கீர்த்தி சுரேஷ் 'ஒல்லியாக' மாற இதுதான் காரணம் | என்னிடமும் ரஜினி சாயலை பார்க்கலாம் : சிவகார்த்திகேயன் | டிஜிட்டலில் வரும் அஜித்தின் ‛அமராவதி' | மறைமுகமாக தனது அடுத்த படத்தை உறுதி செய்த சிவகார்த்திகேயன் | இது ரகசிய திருமணம் இல்ல ஹேப்பி மேரேஜ் : பிரியங்கா விளக்கம் | பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் - நடிகை ரிஹானா அட்வைஸ் | திரைப்படத்திற்காக ஸ்கிரிப்ட் தயார் பண்ணும் ஸ்ருதிஹாசன் | அஜித் 62 அறிவிப்பு எப்போது? - வெளியான தகவல் | விடுதலை படத்தில் 11 இடங்களில் ‛மியூட்' | சமந்தாவை கவர்ந்த அல்லு அர்ஜுனின் மகள் ஆரா |
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்தவர் தமன்னா. 2006ல் வெளிவந்த 'கேடி' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். ஆனால், 'கல்லூரி' படம்தான் அவருக்கு ஒரு சரியான அடையாளத்தைக் கொடுத்தது. தொடர்ந்து ''படிக்காதவன், அயன், கண்டேன் காதலை, பையா, சிறுத்தை, வீரம், பாகுபலி, தோழா, தர்மதுரை, தேவி,” உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
தமிழில் கடைசியாக விஷால் ஜோடியாக 2019ல் வெளிவந்த 'ஆக்ஷன்' படத்தில் நடித்தார். அதற்குப் பிறகு தெலுங்கு, ஹிந்தியில் மட்டுமே நடித்து வந்தார். தமிழில் அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்நிலையில் ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர்' படத்தில் தமன்னா நடிக்கிறார் என்ற அறிவிப்பை நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்கள்.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நடிக்க வந்தாலும் ரஜினிகாந்த் படம் மூலம் ரீ-என்ட்ரி ஆகும் வாய்ப்பு தமன்னாவுக்குக் கிடைத்துள்ளது.