2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

'துணிவு' படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். பாலிவுட்டில் மட்டுமே இதுவரை நடித்து வருகிறார். தென்னிந்தியப் படங்களில் நடிக்க வேண்டும் என்று அடிக்கடி ஜான்வி கூறி வந்தாலும் இன்னும் எந்தப் படத்திலும் நடிக்க சம்மதிக்காமல் இருக்கிறார்.
சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கிளாமர் புகைப்படங்களைப் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருப்பவர் ஜான்வி. அதனால், அவருக்கு அதிகமான பாலோயர்கள் இருக்கிறார்கள். மும்பையிலேயே பிறந்து வளர்ந்தாலும் தனது அம்மா ஸ்ரீதேவியின் தென்னிந்தியத் தொடர்பை அடிக்கடி தன்னிடத்திலும் காட்டுவார் ஜான்வி.
பொங்கலை முன்னிட்டு நேற்று தனது சமூக வலைத்தளத்தில் 'இனிய பொங்கல்' என்று வாழ்த்து தெரிவித்து சில புகைப்படங்களைப் பதிவிட்டிருந்தார். பலரும் அவருக்கு நன்றி தெரிவித்து கமெண்ட் போட்டிருந்தனர். அந்தப் பதிவை மட்டும் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோர் லைக் செய்திருந்தனர். ஜான்வி தமிழில் மட்டுமே பொங்கல் வாழ்த்துயிருந்தார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.