தயாரிப்பாளர் சங்க தேர்தல் தொடங்கியது: இன்று மாலை ஓட்டு எண்ணிக்கை | எங்க வீட்டுப் பிள்ளை, ஆட்டோகிராப், மாமன் - ஞாயிறு திரைப்படங்கள் | கவினுக்கு ஜோடியாகும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி | மீண்டும் இணையும் இருமுகன் கூட்டணி | மீசைய முறுக்கு 2 டீசருக்கு வரவேற்பு | அதிகரிக்கும் ரீ ரிலீஸ் படங்கள் : நல்லதா.... கட்டுப்பாடு வரணுமா...? | வரலட்சுமி இயக்கும் தெலுங்குப் படம் : 'சரஸ்வதி' டிரைலர் ரிலீஸ் | பெங்களூரு ஏஎம்பி சினிமாஸ் தியேட்டரில் மகேஷ்பாபு | சென்னையும், தமிழும்…. பிரபாஸ் நெகிழ்ச்சி… | 'டாக்சிக்' டீசர் : கன்னடத்தை விட தெலுங்கு, ஹிந்தி 'டாப் வியூஸ்' |

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த மாதம் உலகம் முழுவதும் வெளிவந்த ஹாலிவுட் திரைப்படம் 'அவதார் த வே ஆப் வாட்டர்'. இப்படம் தற்போது வரை 1.9 பில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய ரூபாய் மதிப்பில் 15460 கோடி. அமெரிக்காவில் மட்டும் 572 மில்லியன் வசூல், அமெரிக்கா தவிர மற்ற உலக நாடுகளில் 1.35 பில்லியன் வசூலித்துள்ளது இந்தப் படம்.
இப்போது 'ஸ்பைடர் மேன் - நோ வே ஹோம்' படத்தின் வசூலைக் கடந்து உலக அளவில் அதிக வசூலைக் குவித்த படங்களில் 'அவதார் 2' ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 2009ல் வெளிவந்த 'அவதார்' படத்தின் முதல் பாகம் வசூலித்த 2.9 பில்லியன் வசூலை 'அவதார் 2' பெற முடியாது என்றாலும் 2 பில்லியன் வசூலை நிச்சயம் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் மட்டும் இப்படம் 57 மில்லியன் வசூலைக் கடந்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் 463 கோடி ரூபாய். இந்தியாவில் அதிக வசூலைக் குவித்த ஹாலிவுட் படங்களில் 'அவதார் 2' படம் முதலிடத்தில் உள்ளது.




