'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
கேரளாவை சேர்ந்த அமலாபால் தமிழ், தெலுங்கில் நடித்து வருகிறார். கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருவைராணிகுளம் மகாதேவர் கோவில் உள்ளது. இந்த கோயிலில் பிற மதத்தினர் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்நிலையில் அமலாபால் இந்த கோயிலுக்கு சென்றுள்ளார். ஆனால் அவர் வேறு மதத்தை சேர்ந்தவர் என்பதால் அவரை கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை. இதனால் வெளியில் இருந்தபடி சாமி தரிசனம் செய்துள்ளதாக தெரிகிறது. இதுபற்றி தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார் அமலாபால்.
அவர் கூறுகையில், ‛‛திருவைராணி கோயிலுக்கு ஆர்வத்துடன் சாமி தரிசனம் செய்ய வந்தேன். ஆனால் சாமியை அருகில் சென்று தரிசனம் செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. கோயிலுக்கு வெளியே நின்று தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது. 2023ம் ஆண்டிலும் மதபாகுபாடு காட்டப்படுவது வருத்தமாக உள்ளது. இந்தநிலை மாறும் என நம்புகிறேன். மதத்தின் அடிப்படையில் இல்லாமல் மக்களை மனிதர்களாக மதிக்கும் காலம் வரும்'' என தெரிவித்துள்ளார்.
‛‛இந்த கோயிலுக்கு ஏராளமானபேர் வருகிறார்கள். மாற்று மதத்தவரும் வருகிறார்கள். அவர்களை பற்றி வெளியே தெரியாததால் பிரச்னை ஏற்படுவது இல்லை. அமலாபால் பிரபலமானவர் என்பதால் அது சர்ச்சையாகி உள்ளது. கோயிலில் இதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்த நடைமுறைப்படியே நடந்துள்ளோம். அதனால் அமலாபாலை அனுமதிக்கவில்லை'' என கோயில் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.