ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
2023 பொங்கலுக்கு தமிழில் இரண்டு படங்களும், தெலுங்கில் மூன்று படங்களும் வெளிவந்தன. தெலுங்கில் வெளியான இரண்டு படங்களில் ஸ்ருதிஹாசன் தான் கதாநாயகி. சிரஞ்சீவி நடித்து வெளிவந்த 'வால்டர் வீரய்யா', பாலகிருஷ்ணா நடித்து வெளிவந்த 'வீரசிம்ஹா ரெட்டி' இரண்டு படங்களிலும் ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார். அவரது அப்பா வயது சீனியர் ஹீரோக்களான சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா ஆகியோருடன் ஜோடி சேர்ந்து நடிக்கிறாரே என்று ஒரு சலசலப்பு எழுந்தது. அது தொடர்பான சில பல மீம்ஸ்கள் கூட சமூக வலைத்தளங்களில் வைரலாகின. ஆனால், அவற்றையும் மீறி அந்த ஜோடிகளை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டு படங்களை வெற்றிப் படங்களாக்கிவிட்டார்கள்.
2023 பொங்கலுக்கு ஹீரோக்களுக்குக் கிடைத்த வெற்றிகளை விட ஸ்ருதிஹாசனுக்குக் கிடைத்த வெற்றிதான் முக்கியமானது. இந்தப் படங்களை அடுத்து அவர் நடித்து இந்த வருடம் செப்டம்பர் 28ம் தேதி வெளிவர உள்ள படம் 'சலார்'. பிரபாஸ் நடிக்கும் இப்படத்தை 'கேஜிஎப்' இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கி வருகிறார். 2021ல் 'லாபம்' படத்தில் நடித்தற்குப் பிறகு ஸ்ருதி எந்த ஒரு தமிழ்ப் படத்திலும் நடிக்கவில்லை.