ஹிந்தி நடிகை பரிணீதி சோப்ரா திருமணம் | 'சந்திரமுகி 3' நடந்தால் ரஜினிகாந்த் நடிப்பாரா ? | விக்ரமின் மகாவீர் கர்ணன் விரைவில் துவக்கம் ; இயக்குனர் அறிவிப்பு | உத்தரகண்ட் முதல்வரை சந்தித்த ஆதிபுருஷ் நாயகி ; பின்னணி இதுதான் | தெறி ஹிந்தி ரீமேக்கில் இணைந்த கீர்த்தி சுரேஷ்! | இந்தியாவில் ஹிந்தியில் மட்டும் 500 கோடி கடக்கும் 'ஜவான்' | 2 நாட்களில் ஐந்து மில்லியன் பார்வைகளை கடந்த திரிஷாவின் ‛தி ரோடு' டிரைலர்! | 'சந்திரமுகி 2' வெளியீடு தள்ளிப் போனது ஏன் ? | ஸ்கந்தா படத்திற்கு யு/ஏ சான்றிதழ்! | ஹாலிவுட் பட வாய்ப்பு - அட்லீ! |
விஜய் சேதுபதி நடித்து வரும் பல படங்களில் மைக்கேல் படமும் ஒன்று. ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கி வரும் இந்த படத்தில் சந்தீப் கிஷனுடன் விஜய் சேதுபதி, கதவும் மேனன், வரலட்சுமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. பிப்ரவரி 3ம் தேதி இந்த படம் திரைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் மைக்கேல் படத்தில் விஜய் சேதுபதியின் வித்தியாசமான கெட்டப்பை வெளிப்படுத்தும் வகையில் ஒரு ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி. அந்த வீடியோவில் கம்பீரமான தோற்றத்தில் கூலிங் கிளாஸ் அணிந்து மாஸாக காணப்படுகிறார் விஜய் சேதுபதி. இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.