பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

யோகி பாபுவின் நண்பர் முத்துக்குமரன். கன்னிராசி படத்தை இயக்கிய இவர் அதன்பிறகு யோகி பாபு கதையின் நாயகனாக நடித்த தர்மபிரபு படத்தை இயக்கினார். தற்போது அவர் இயக்கி வரும் படம் சலூன். இதில் மிர்ச்சி சிவா, யோகி பாபு, நயன் கரிஷ்மா நடித்துள்ளனர். மணிகண்டன் ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார்.
படம் குறித்து இயக்குனர் முத்துக்குமரன் கூறியதாவது: வெள்ளைக்காரன் காலத்தில் பார்பராக இருந்த அய்யன்காளிக்கு அந்தக் காலத்தில் அவர் நினைத்த காரியங்களை செய்ய முடியவில்லை. அதனை பல வருடஙக்ளுக்கு பிறகு அவரது பேரன் காளி எப்படி நிறைவேற்றுகிறார் என்பதுதான் கதை. இதில் தாத்தா பேரன் என்ற இரு கேரக்டரிலும் சிவா நடித்துள்ளார். தாத்தா கேரக்டரில் சீரியசாகவும், பேரன் கேரக்டரில் காமெடியாகவும் நடித்திருக்கிறார்.
அவரது நண்பராக சுருளி என்ற கேரக்டரில் யோகி பாபு நடித்துள்ளார். நாயகி நயன் கரிஷ்மா அரசியல் கட்சி தலைவரின் மகளாக நடித்திருக்கிறார். இது அரசியலை கிண்டல் செய்யும் படம். அதனால் பின்னாளில் வம்பு எதுவும் வரக்கூடாது என்பதற்காக பொதிகைமலைநாடு என்ற கற்பனை நாட்டை உருவாக்கி அங்கு கதை நடப்பதாக காட்டுகிறோம். என்றார்.




