நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

2023 பொங்கலுக்கு தமிழில் இரண்டு படங்கள், தெலுங்கில் மூன்று படங்கள் வெளியாகி உள்ளன. தமிழில் விஜய் நடித்த 'வாரிசு', அஜித் நடித்த 'துணிவு' ஆகிய படங்களும், தெலுங்கில், பாலகிருஷ்ணா நடித்த 'வீரசிம்ஹா ரெட்டி', சிரஞ்சீவி நடித்த 'வால்டர் வீரய்யா', சந்தோஷ் சோபன், பிரியா பவானி சங்கர் நடித்த 'கல்யாணம் கமனீயம்' ஆகிய படங்களும் வெளியாகி உள்ளன.
இந்தப் படங்கள் கர்நாடகாவிலும் பெரிய அளவில் வெளியிடப்பட்டுள்ளன. கர்நாடகத் தலைநகரான பெங்களூருவைப் பொறுத்தவரையில் நிறைய தமிழர்கள், தெலுங்கர்கள் உள்ளனர். அங்கு அதிக அளவில் தமிழ், தெலுங்குப் படங்கள் வெளியாகும். இந்த வருடப் பொங்கலுக்கு முன்னணி நடிகர்களின் படங்களுக்கு கடும் போட்டி நிலவி வருகிறது. இருப்பினும் தெலுங்கு படங்களைக் காட்டிலும் தமிழ்ப் படங்கள் அதிக வசூலைக் குவித்து வருகின்றன.
முதல் நாளை வசூலைப் பொறுத்தவரையில், 'வாரிசு' படம் முதலிடத்திலும், 'துணிவு' படம் இரண்டாம் இடத்திலும், தெலுங்குப் படங்களான 'வீரசிம்ஹா ரெட்டி, வால்டர் வீரய்யா' முறையே மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களையும் பிடித்துள்ளன.
'வாரிசு' படம் கடந்த மூன்று நாட்களில் 7 கோடி வரையிலும், 'துணிவு' படம் 6.75 கோடி வரையிலும் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் 'துணிவு' படம் இன்றே தனது லாபக் கணக்கை ஆரம்பித்துவிடும் என்கிறார்கள். 'வாரிசு' படத்தின் லாபக் கணக்கு நாளை முதல் ஆரம்பமாக வாய்ப்புள்ளதாகச் சொல்கிறார்கள். ஆக, இரண்டு தமிழ்ப் படங்களுமே கர்நாடகாவில் லாபகரமான வசூலை அள்ளும் என்பதே தகவல்.