'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
சினிமாவில் நடிகராக இருந்து கொண்டு இன்னொரு ஹீரோவின் ரசிகர் என யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் சொல்ல மாட்டார்கள். ஆனால், ஒரு சிலர் நான் இந்த ஹீரோவின் ரசிகன் என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் சொல்வார்கள். அப்படிப்பட்டவர்களில் 'நான் அஜித்தின் ரசிகன்' என வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார் 'துணிவு' பட வில்லன் ஜான் கொக்கேன்.
பா ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த 'சார்பட்டா பரம்பரை' படத்தில் வேம்புலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ஜான் கொக்கேன். ஆனால், அவர் இதற்கு முன்பே அஜித் நடித்த 'வீரம்' படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்தப் படத்தில் ரயில் நிலைய சண்டைக் காட்சி ஒன்றில் அஜித் மீது கோடாரியைத் தூக்கி எறிபவர் ஜான் தான். அந்த 'வீரம்' படத்தின் புகைப்படத்தையும், இப்போது 'துணிவு' படத்தின் புகைப்படத்தையும் சேர்த்துப் பகிர்ந்து ஜான் கொக்கேன், “கனவு நனவானது... எப்போதும், எப்போதும் பெருமை மிகு அஜித் ரசிகன்” எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும், நாளை மதுரைக்குச் சென்று பொங்கலைக் கொண்டாட உள்ளதாகவும், தனது முதல் மதுரைப் பயணம், மதுரை உணவை சுவைக்க ஆவலாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.