பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி |
விஜய் நடித்த வாரிசு திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் திரையிடப்பட்ட பல தியேட்டர்களில் விஜய் ரசிகர்களை கவரும் விதமாக புதுப்புது யுக்திகளை பயன்படுத்தி வருகின்றனர் தியேட்டர் நிர்வாகத்தினர். அந்தவகையில் தமிழகத்தில் உள்ள ஒரு திரையரங்கம் ஒரு புதிய யுக்தியை கையாண்டு விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தியதுடன் விஜய் தரப்பினருக்கு அதிர்ச்சியையும் அளித்துள்ளது. விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ள அவரது 67வது படம் தற்போது படப்பிடிப்புடன் துவங்கியுள்ளது.
கவுதம் மேனன், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட ஒரு சிலர் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகி உள்ள நிலையில் படத்தின் புகைப்படமோ போஸ்டர்களோ எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால் ரசிகர் ஒருவர் இந்த படத்திற்காக டீசர் போன்று உருவாக்கிய வீடியோ ஒன்றை இந்த தியேட்டர் நிர்வாகம் படத்தின் இடைவேளையின் போது ஒளிபரப்பி விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. பார்ப்பதற்கு படத்தயாரிப்பு நிறுவனமே வெளியிட்டது போன்று தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ள அந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.