நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
விஷால் நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாரான படம் லத்தி. இதனை அவரது நண்பர்களும், நடிகர்களுமான நந்தாவும், ரமணாவும் இணைந்து தயாரித்திருந்தார்கள். விஷாலுடன் சுனைனா, ரமணா, பிரபு, முனீஷ்காந்த், மிஷா கோஷல், தலைவாசல் விஜய், மாஸ்டர் லிரிஷ் உள்பட பலர் நடித்திருந்தார்கள். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார், பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்திருந்தார். புதுமுகம் வினோத் குமார் இயக்கி இருந்தார். கடந்த டிசம்பர் மாதம் 22ம் தேதி வெளியான இந்தப் படம் 25 ஆட்களே ஆன நிலையில் சின்னத்திரைக்கு வந்திருக்கிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு டிவி ஒன்றில் 16ம் தேதி மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.