பிரபாஸ் ஜோடியாகும் அனிமல் பட நடிகை! சீன, கொரியன், ஜப்பானிஸ் மொழிகளிலும் ரிலீசாகும் ‛ஸ்பிரிட்' | மோகன் ராஜா இயக்கத்தில் சிம்பு? | பிரேம் குமார் இயக்கத்தில் விக்ரம்? | ஷாருக்கானை வைத்து அலைபாயுதே திட்டம்! - மணிரத்னம் | தெலுங்குத் திரையுலகினர் மீது பவன் கல்யாண் கோபம் | கலாம் கதையை படமாக்குவது சவால்: இயக்குனர் ஓம் ராவத் | அரசியல் சீன், டயலாக் உருவாக்கி கொடுத்த நடிகர் | ரோஜாஸ்ரீயின் அழகு ரகசியம் | ‛‛கமல் ஒரு ஏணி; அவரை மதித்து மேலே செல்வேன், மிதித்து அல்ல'': சிம்பு | 'கேம் சேஞ்ஜர்' அனுபவம் ஒரு 'பயங்கரம்' - விலகிய எடிட்டர் பேச்சு |
பிக்பாஸ் சீசன் 6ல் அதிகம் கவனம் பெற்ற போட்டியாளர்களில் ஒருவர் சின்னத்திரை நடிகை ரச்சிதா மஹாலெட்சுமி. இறுதிப்போட்டிவரை நிச்சயமாக செல்வார் என அவரது ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், ரச்சிதா பிக்பாஸ் வீட்டிற்குள் சொல்லிக்கொள்ளும் வகையில் கேமை விளையாடவில்லை. அழகுபதுமையாக வெகேஷனுக்கு சென்றது போல் பிக்பாஸ் வீட்டில் சுற்றித்திரிந்து பலரும் விமர்சிக்கும் வகையில் நடந்து கொண்டார் என்பது பலரின் விமர்சனமாக இருந்தது. இறுதியில், கடந்தவார எவிக்ஷனில் வெளியேறினார்.
இந்நிலையில், வெளியே வந்துள்ள ரச்சிதாவுக்கு நண்பர்களும் ரசிகர்களும் சேர்ந்து ஏகபோக வரவேற்பை கொடுத்துள்ளனர். வீட்டிற்கு ரச்சிதா வருகையில் பட்டாசு வெடித்து, ஆரத்தி எடுத்து ஆளுயர ரோஜாப்பூமாலையும் அணிவித்து வரவேற்றுள்ளனர். பிக்பாஸ் வீட்டில் ரச்சிதா இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களால் அவரது வீட்டையும் அலங்கரித்து, மக்களின் ஸ்டார் என்ற பட்டத்தை கொடுத்து கேக் வெட்டியும் கொண்டாடியுள்ளனர். மேலும், ரச்சிதாவை பற்றி 'அவள் ஒரு சபிக்கப்பட்ட தேவதை' என்ற அழகிய கவிதையையும் பதிவிட்டுள்ளனர். இவையனைத்தும் அழகிய வீடியோவாக தொகுக்கப்பட்டு 'வா தலைவி வா' என பில்டப் சாங்குடன் வெளியாகி ரசிகர்களால் வைரல் செய்யப்பட்டு வருகிறது.
இதைபார்க்கும் சிலர் 'ரச்சிதா எப்படி என்ன சாதிச்சிட்டாங்கன்னு இவ்வளவு பில்டப்பு?' என கேட்டு வந்தாலும், ரசிகர்களோ ரச்சிதாவை கொண்டாடி வருகின்றனர்.