ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

திரைப்பட நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருந்த உதயநிதி தற்போது இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகி இருக்கிறார். அவரை நேற்று தலைமை செயலகத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணை தலைவர் பூச்சி முருகன், நடிகைகள் லதா, சோனியா, நடிகர் ராஜேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்பு குறித்து தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் “விளையாட்டு மற்றும் இளைஞர் நல அமைச்சர் உதயநிதிக்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் வாழ்த்துகள். தாங்கள் பொறுப்பேற்றதன் காரணமாய் இளைஞர்கள் மேல்தளம் நோக்கி முன்னேறவும் விளையாட்டு வீரர்கள் உலக அரங்கில் தங்கப்பதக்கங்கள் குவித்து தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கவும் செய்வர் என நம்பிக்கை பிறக்கிறது. தென்னிந்திய நடிகர் சங்கம் இவ்வளர்ச்சிக்கு ஆதரவையும், பங்களிப்பையும் நல்கும் என்ற உறுதியளிக்கிறது”என்று கூறப்பட்டுள்ளது.




